சாலையின் தடுப்பு சுவரில் மோதிய தனியார் பேருந்து..... 10 பயணிகள் காயம் - MAKKAL NERAM

Breaking

Thursday, January 2, 2025

சாலையின் தடுப்பு சுவரில் மோதிய தனியார் பேருந்து..... 10 பயணிகள் காயம்

 


மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை ஒரு தனியார் பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மீதுள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment