இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டி..... கொல்கத்தா சென்றது இந்திய அணி - MAKKAL NERAM

Breaking

Sunday, January 19, 2025

இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டி..... கொல்கத்தா சென்றது இந்திய அணி

 


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனையொட்டி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் நேற்று கொல்கத்தா சென்றடைந்தனர். அங்கு தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இங்கிலாந்து அணியும் நேற்று கொல்கத்தா சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment