வாசுதேவநல்லூர் பகுதிகளில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் படி தவெக கொடி ஏற்றப்பட்டது
தென்காசி, வாசுதேவநல்லூர் ராயகிரி பேரூராட்சி உட்பட்ட மேலகரிசல் குளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் காலை 11 மணியளவில் தென்காசி வடக்கு மாவட்டம் மாரியப்பன் அவர்கள் தலைமையில் ஏற்றப்பட்டது.
அதை சிவகிரி காவல்துறை அதிகாரிகளால் சிறிது நேரம் கழித்து அகற்றப்பட்டது. பின்பு சிவகிரியில் தேவர் சிலை அருகில் மதுரை மெயின் ரோட்டில் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள், தோழிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
மாலை 6 மணி அளவில் மீண்டும் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பத்தை மேலகரிசல் குளத்தில் அதே இடத்தில் ஏற்றப்பட்டது.
No comments