நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள வாழக்கரையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 28 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் இசை நாற்காலி,பானை உடைத்தல்,1000 மீட்டர் ஓட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்துகொண்டு பரிசு பொருட்களை வழங்கி ஊக்குவித்தார்.
இவ்விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கௌசல்யா இளம்பரிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சரபோஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் தினேஷ், சிபிஐ ஒன்றிய துணை செயலாளர் மாசேத்தூங், ஆசிரியர் கணபதிசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.இறுதியாக பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி
செல்: 9788341834
No comments:
Post a Comment