பாஜக மகளிரணி நிர்வாகிகள் வீட்டுக்காவல்.... முதல்வரே வெட்கமா இல்லையா...? அண்ணாமலை ஆவேசம் - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 3, 2025

பாஜக மகளிரணி நிர்வாகிகள் வீட்டுக்காவல்.... முதல்வரே வெட்கமா இல்லையா...? அண்ணாமலை ஆவேசம்

 


தமிழக பாஜக கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று மதுரையிலிருந்து சென்னை வரையில் நீதிப்பேரணி நடக்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால் தற்போது பாஜக கட்சியின் முக்கிய பெண் நிர்வாகிகளை வீட்டிற்கு சென்று போராட்டம் நடத்த விடாமல் போலீசார் சிறை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து அதற்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, பாஜக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு. 

இந்த திமுக ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களே? திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா?

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here