அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் யூ ஜி சி யின் (UGC) புதிய விதிமுறைகளை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் யூ ஜி சி யின் (UGC) புதிய விதிமுறைகளை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


யூ ஜி சி யின் (UGC) புதிய விதிமுறைகளை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கழக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் CVPM.எழிலரசன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.  மேலும் மாநில இணை செயலாளர்கள் துணை செயலாளர்கள் காஞ்சி வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் எல் பிரபு அவர்களின் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதில் காஞ்சி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கலாநிதி குணாளன், விக்கி (எ) விக்னேஸ்வரன், வே.சங்கீதா மற்றும் ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment