திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் ஆலய மகா சம்வத்சராபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 22, 2025

திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் ஆலய மகா சம்வத்சராபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவேள்விகுடி என்ற கிராமத்தில், சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறுவதற்காக வேள்வி நடைபெற்ற இடத்தில் மணவாளேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியவரால் தேவார திருப்பதிகங்கள் பாடல் பெற்ற இந்த ஆலயம் திருமணத்தடை நீக்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாகும்.

ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது.இதன் முதலாம் ஆண்டு சம்வத்சராபிஷேகம் நேற்று ஆலயத்தில் நடைபெற்றது இதனை முன்னிட்டு குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா ருத்ர வேள்விகள் நடைபெற்றன.யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து மகாபூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க புனித கடம் புறப்பாடு செய்யப்பட்டது  சுவாமி அம்பாள் ஆகியோருக்கு புனித நீர் ஊற்றி,மகா அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment