அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி...... மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான நிலையம் வந்ததும் அமைச்சருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு நெஞ்சுவலி வந்தது. இதனால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
No comments