தென்காசி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல், வர்த்தக அணி ஆலோசனைக்கூட்டம்..... முதல்வர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல், வர்த்தக அணி ஆலோசனைக்கூட்டம்..... முதல்வர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்


தென்காசி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல், வர்த்தக அணி ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி, சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தென்காசியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து நடைபெற்றது.  மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்.அறிவழகன், வர்த்தக அணி அமைப்பாளர்முத்துகுமார் முன்னிலை வகித்தனர்.

மாவட்டவர்த்தகஅணி தலைவரும், கடையநல்லூர் நகராட்சி தலைவருமான மூப்பன்ஹபீபுர்ரஹ்மான்,சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் மல்லிகா, வர்த்தக அணி துணைத் தலைவர் பிலிப் ராஜா ,துணை அமைப்பாளர்கள் கோட்டைச்சாமி செல்வவிநாயகம், உதயசூரியன், இசக்கிதுரை, சமுத்திரபாண்டி, சேகனா,ஈஸ்வரன், அப்துல்காதர், சுப்பிரமணியன், மணிகண்டன், முத்துகுமார், சந்திரசேகர் மற்றும் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், தென்காசி யூனியன் சேர்மன் சேக்அப்துல்லா, தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், சுரண்டை நகர பொறுப்பாளர் கணேசன், ராம்ராஜ், கரிசல் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மார்ச் 1ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, தமிழ்நாடு சட்டமன்ற மாண்பையும் மரபையும் மதிக்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதல்வர் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்கும் ஆளுநர் ஆர் என் ரவியை  இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு அவரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். சுரண்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என உயர் கல்வித் துறையை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment