நம்பியூர் பேரூராட்சி மற்றும் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி இணைந்து இலவச மருத்துவ முகாம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 29, 2025

நம்பியூர் பேரூராட்சி மற்றும் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி இணைந்து இலவச மருத்துவ முகாம்


ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் பேரூராட்சி உட்பட்ட சமுதாய நலக்கூடத்தில் நம்பியூர் பேரூராட்சி மற்றும் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி இணைந்து முதியோர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதன்மை மருத்துவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.இதில் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும் , நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ப. செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முகாமில் வயதான மற்றும் அனைவருக்கும் ஏற்படும் கை,கால், இடுப்பு, மூட்டு வலி , ரத்த சக்கரை,உயர் ரத்த அழுத்தம் மற்றும் அனைத்து விதமான நோய்களுக்கும்  இயற்கை மருத்துவ முறையில் முழுமையான மருத்துவ ஆலோசனை கொடுத்து நோய்க்கு ஏற்றார் போல் மசாஜ்,மூலிகை ஒத்தடம், யோகா, மூச்சு பயிற்சி, உணவு அட்டவணை ஆகிய அனைத்தும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முகமில் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.முகாமில் மருத்துவர்கள் ஜிவ்யா, சரத்குமார், கார்த்திகேயன் சிகிச்சை அளித்தனர். திமுக கட்சி நிர்வாகிகள் சண்முகம்,வரதராஜ் உள்பட மருத்துவ துறை மாணவர்கள் பலர் கலந்து உள்ளனர்.

நம்பியூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற இயற்கை மருத்துவர் முகாமில் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம் அருகில் மருத்துவர் மணிவண்ணன் உள்பட பலர் உள்ளனர்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment