சுகாதார பணிகளில் அலட்சியம் காட்டுவதாக புகார்: நிர்வாக அதிகாரியை கண்டித்து ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை...... பதவி விலககோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 29, 2025

சுகாதார பணிகளில் அலட்சியம் காட்டுவதாக புகார்: நிர்வாக அதிகாரியை கண்டித்து ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை...... பதவி விலககோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு


ஆலங்குளம் பேரூராட்சியில் சுகாதார பணி மேற்கொள்வதில் நிர்வாக அதிகாரி அலட்சியம் காட்டுவதாக கூறி, ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவர் பதவி விலககோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம் பேரூராட்சியில் நிர்வாக அதிகாரியாக சிவக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பதவியேற்றதில் இருந்து பேரூராட்சி பகுதியில் குறிப்பிட்ட சில வார்டு பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டுவதாகவும், குப்பைகள் அள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும், வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பேரூராட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட 5 மற்றும் 13வது வார்டு பகுதியில் குப்பைகள் அள்ளவில்லை என்றும், இதனால் அவ்வார்டு பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள்தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாய நிலை உள்ளது என்று அப்பகுதி வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதனை  கண்டித்து வார்டு உறுப்பினர் கணேசன் மற்றும் லிங்கவேல்ராஜ்வக்கீல் ராஜா, ஞானபிரகாஷ், மதிமுக நகர செயலாளர் கண்ணன், யோகராஜா, வக்கீல் கருப்புசித்தன், லிவிங் ஸ்டன் விமல், லட்சுமணன், அலெக்ஸ், மோகன் உள்ளிட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்களை புறக்கணிக்கும், விரோதமாக செயல்படும் நிர்வாக அதிகாரியை கண்டிக்கிறோம், ஆலங்குளம் மக்களை வஞ்சிக்கும் நிர்வாக அதிகாரியே பதவி விலக்கு,  குப்பைகள் அள்ளாத நிர்வாக அதிகாரி எங்களுக்கு வேண்டாம் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment