பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் - MAKKAL NERAM

Breaking

Friday, January 24, 2025

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்

 


பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கபடி போட்டியில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் தமிழக வீராங்கனைகள் மீது நாற்காலிகளை தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment