மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து..... கார்கள் எரிந்து சேதம்
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யராஜ் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடபாண்டிலும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கிய சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கானோர் புனித நீராடியுள்ளனர். இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் செக்டார் 19 பகுதியில் சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 18 கூடாரங்கள் எரிந்து சேதமானது.
இந்நிலையில் இன்று அதிகாலையும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் திடீரென தீ பரவியது. 2 கார்களும் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து சேதமான நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும் இதனால் அந்த பகுதியில் பரம்பரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
No comments