துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 29, 2025

துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்


திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றக் கூடிய பேராசிரியர் சரவணகுமார் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பேராசிரியர் பாத்திமா அவர்கள் வகுப்புகளுக்கு சரியாகச் செல்லவில்லை எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.பேராசிரியர் சரவணன் இதற்கு முன்னதாக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி அங்கே சாதி ரீதியாக மாணவர்களை அணி திரட்டி வன்முறை வெறியாட்டத்திற்கு தூண்டுவது என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கம் கும்பகோணம் கல்லூரியில் இதனை வன்மையாக கண்டித்ததன் விளைவாக அவர் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

 கோயம்புத்தூரில் பணியாற்றுகின்ற பொழுது ஏற்கனவே பாத்திமா என்ற பேராசிரியரும் கோயம்புத்தூரில் பணியாற்றினார்கள் அவர்கள் இருவருக்குமான தொடர்பு கோயம்புத்தூர் கல்லூரியில் இருந்து தொடர்ந்தது பிறகு கோயம்புத்தூரில் இருந்து இந்திய மாணவர் சங்கம் பாத்திமா என்ற பேராசிரியர் தொடர்ச்சியாக வகுப்புக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய விளைவாக துவாக்குடி அரசு கலைக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர்.


 கோயம்புத்தூரில் பணியாற்றி வந்த சரவணன் அங்கே பிரச்சனையின் காரணமாக திருச்சி ஈவெரா கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார் அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் ஏதோ ஒரு பிரச்சனையை மையமாக வைத்து செயல்பட்டு இருந்த சரவணன் பேராசிரியர் இறுதியாக துவாக்குடி அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை தலைவராக பொறுப்பேற்றார் .பொறுப்பேற்று இதற்கு முன்னதாக புவியியல் துறையில் துறை தலைவராக இருந்த பாத்திமா மற்றும் சரவணன் இடையே கருத்து மோதல் ஆனது  தொடர்ந்தது சரவணன் என்ற பேராசிரியர் பாத்திமா அவர்களுடைய லிப்ஸ்டிக் சரியில்லை என்று சொல்வதும் எனக்கு இந்த நிறம் பிடிக்கவில்லை என்று சொல்வதும் நீங்கள் உள்ளாடை எதை போடுகிறீர்கள் என்று சொல்லவும் என பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என பாத்திமா என்ற பேராசிரியர் கல்லூரி முதல்வருக்கு மனு அளித்தார் இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை குழுவில் சரவணன் மற்றும் பாத்திமாவை அழைத்த நிலையில் சரவணன் அவர்கள் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு அலைபேசியில் மிரட்டல் எடுத்துள்ளார் அதன் விளைவாக கல்லூரி முதல்வர் மயக்கம் அடைந்து பெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 இந்த பிரச்சனையானது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நிலையில் பாத்திமா பேராசிரியருக்கும் சரவணன் பேராசிரியருக்கும் இடையேயான மோதலில் பேராசிரியர் சரவணன் பாத்திமா என்ற பேராசிரியரே உன்னை இந்த கல்லூரியை விட்டு இந்திய மாணவர் சங்கத்தின் உடைய மாணவர்களை வைத்து தூக்கி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பிறகு உண்மை நிலவரங்களை கண்டறிந்த இந்திய மாணவர் சங்கத்தின் தோழர்கள் வகுப்புக்கு போகாமல் அறையில் இருந்து கொண்டே அலட்சிய போக்கோடு செயல்படும் பேராசிரியர் பாத்திமா அவர்களை கண்டித்தும் தொடர்ச்சியாக மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நீங்கள் மனு அளிக்க வேண்டும் ஆர் ஜே டி அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்த வேண்டும் போராட்டம் நடத்துவதற்கான மொத்தச் செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் மாணவர்களை வன்முறை வெறியாட்டத்திற்கு தூண்டிவிட்டு பேருந்து மற்றும் உணவுக்கான பணத்தையும் கொடுத்து மாணவர்களை தன்னுடைய சுய லாபத்திற்கு சுய பிரச்சனைக்கு தவறாக வழிநடத்தும் பேராசிரியர் சரவணன் கண்டித்தும் வகுப்பிற்கு செல்லாமல் இருக்கும் பாத்திமாவை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் துவாக்குடி கிளையின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கிளைச் செயலாளர் துளசிராமன் தலைமை தாங்கினார் இந்த போராட்டத்தில் கண்டன உரையாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் ஜி கே மோகன் மாவட்ட தலைவர் வைரவளவன் மாவட்ட செயலாளர் ஆமோஸ் மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கல்லூரி அலுவலகத்திலிருந்து நுழைவாயிலுக்கு பேரணியாக வந்து போராட்டம் நடத்தினார்கள் இந்த போராட்டத்தில் பேராசிரியர் சரவணன் அவர்களை கைது செய்யவும் பாத்திமா அவர்களை நடவடிக்கை எடுக்கவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment