சமூக நலஅறக்கட்டளை சார்பில் முககவசம்..... HMPV உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் நோய் ,முகக் கவசம் அணியுங்கள்,கைகளை நன்றாகக் கழுவுங்கள்,கூட்டத்தை தவிருங்கள்" சுகாதார விழிப்புணர்வு - MAKKAL NERAM

Breaking

Thursday, January 9, 2025

சமூக நலஅறக்கட்டளை சார்பில் முககவசம்..... HMPV உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் நோய் ,முகக் கவசம் அணியுங்கள்,கைகளை நன்றாகக் கழுவுங்கள்,கூட்டத்தை தவிருங்கள்" சுகாதார விழிப்புணர்வு


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆயப்பாடியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில்  சங்கரன்பந்தல் இலுப்பூர் பேரூந்து நிலையம் கடைவீதி மற்றும் பேரூந்துகளில் பொதுமக்கள் நலனுக்காக HMPV உள்ளிட்ட கொடிய உயிர் கொல்லி நோய்களிருந்து பாதுகாத்துகொள்ள  சுகாதார விழிப்புணர்வு செய்தும் கூட்டமான இடங்களில் நெரிசலில் மாஸ்க் முககவசத்தை கட்டாயம் அணிந்துக்கொள்ளுமாறு சமூக செயற்ப்பாட்டாளரும் சமூக நல அறக்கட்டளையின் அறங்காவலருமான  ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மான் இன்று பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து தொடங்கிவைத்தார்.

 சமுக நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் மணிகண்டன்,முஹம்மது அமீன், மனித உரிமை அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் இன்பராஜ், ஜெகதீஸ், சமூக ஆர்வலர் சங்கை தாஜ்தீன்  உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு  முககவசம் வழங்கினார்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் பெற்று அணிந்துக்கொண்டனர்.



No comments:

Post a Comment