நாகை: இருக்கை அருள்மிகு அபிராமி அம்பிகா சமேத பீமபுரீஸ்வர் ஆலயத்தில் தைபூசத்தை முன்னிட்டு நடைப்பெற்ற 108 குத்து விளக்கு பூஜை - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 12, 2025

நாகை: இருக்கை அருள்மிகு அபிராமி அம்பிகா சமேத பீமபுரீஸ்வர் ஆலயத்தில் தைபூசத்தை முன்னிட்டு நடைப்பெற்ற 108 குத்து விளக்கு பூஜை


நாகப்பட்டினம் மாவட்டம் இருக்கை கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி அம்பிகா சமேத பீமபுரீஸ்வர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் தைபூசத்தை  முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனையோடு குத்துவிளக்கு ஏற்றி குத்து விளக்கை அம்பாளாக பாவித்து வேத மந்திரங்கள் முழங்க குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். 

அதனைத் தொடர்ந்து பால் ,பன்னீர், தேன் , தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்  பங்கேற்று தேவாரம் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.


செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி

No comments:

Post a Comment