தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 61வது வார்டு ஸ்ரீராம் நகரில் எம்எல்ஏ ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Thursday, February 20, 2025

தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 61வது வார்டு ஸ்ரீராம் நகரில் எம்எல்ஏ ஆய்வு

 


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 61வது வார்டு ஸ்ரீராம் நகரில் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்று வரும்  மழைநீர் வடிகால்வாய் பணியால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள்  கொடுத்த கோரிக்கயை 4வது மண்டல குழு தலைவர் பகுதி கழக செயலாளர் டி.காமராஜ் 18/02/2025 அன்று நேரில் சென்று ஆய்வு செய்ததின் அடிப்படையில் நேற்று 19/02/2025 தாம்பரம் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்,எல்,ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு இன்று (20/02/2025)  அவரது தலைமையில்  பொதுப்பணித்துறை சாம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 இதில் தெற்கு பகுதி கழக செயலாளர் எஸ்.சேகர், 61வது மாமன்ற உறுப்பினர் ஹேமாவதி சேகர், வட்டக் கழக நிர்வாகிகள் பொது பணி துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment