ஹரியானா: ஜீப் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி - MAKKAL NERAM

Breaking

Sunday, February 2, 2025

ஹரியானா: ஜீப் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி

 


ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள மெஹ்மாரா கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் ஜீப் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தரேவாலா கிராமம் அருகே வந்துக்கொண்டிருந்தது.அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பனிமூட்டம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியது என விசாரணையில் தெரியவந்தது.

No comments:

Post a Comment