புளியங்குடி பகுதிகளில் சீராக குடிநீர் வழங்க கோரி, நகர பிஜேபி சார்பில் மனு அளிக்கப்பட்டது


புளியங்குடி நகரில் கடந்த 17  நாட்களாக மெயின் ரோடு கீழ் புறம் உள்ள தெருக்கள் சோவாலன் தெரு வேலாயுதம் தெரு அடிவட்டி தெரு காலாடி தெருநீர் பாச்சி மாடன் தெரு ரெங்ககருப்பன்தெரு வரை உள்ள சுமார் 14 க்கு மேற்பட்ட வார்டுகளிகளில் கடந்த 17 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை மோட்டார் பழுது அதனால் குடிநீர் விநியோகம் இல்லை என தெரியவருகிறது, எனவே இப்பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளில் உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மனு கொடுக்கபட்டது.

உடன் நகர தலைவர் சண்முகசுந்தரம் மகளிரணி திருமதி மகாலெட்சுமி மகேஸ்வரி செயற்குழு உறுப்பினர்கள் குரு செல்வம் கண்ணன் டாக்டர் மாலீஸ்ராஜ் கனகராஜ் கிளை தலைவர் இராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், புளியங்குடி நகராட்சி நிர்வாக அதிகாரி அவர்களிடம் மனு கொடுக்க பட்டது.

Post a Comment

0 Comments