கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாவூர்சத்திரத்தில் அண்ணா நினைவு தினம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்பு
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாவூர்சத்திரத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அண்ணா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், பாவூர்சத்திரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, குறும்பலாப்பேரி டால்டன், ஊராட்சி தலைவர் ராஜ்குமார், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, தொண்டரணி துணை அமைப்பாளர் சொட்டு சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திரபாண்டி, வளர்மதிராஜன், அறங்காவல் குழு உறுப்பினர் காலசாமி, தொழிலதிபர் சேவியர்ராஜன், நிர்வாகிகள் வினைதீர்த்தான், நடராஜன், கபில்தேவதாஸ்,செட்டியூர் ஹரி, டேனியல், வக்கீல் அரிகிருஷ்ணன் உள்ளி.ட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments