• Breaking News

    சென்னையில் கடும் பனிமூட்டம்..... விமான சேவைகள் பாதிப்பு

     


    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிக அளவில் நிகழ்கிறது.

    இதனால் புறநகர் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பனிமூட்டம் காரணமாக பாதிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் தரை இறங்க வேண்டிய ‌6 விமானங்கள் பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து வருகிறது.

    No comments