சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா.... ஏற்பாட்டில் கோட்டை விட்ட இந்து சமய அறநிலையத்துறை..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 11, 2025

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா.... ஏற்பாட்டில் கோட்டை விட்ட இந்து சமய அறநிலையத்துறை.....


திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இக்கோவிலுக்கு வந்து செல்வர்.மேலும்,இன்று தைப்பூச திருவிழா என்பதாலும் இன்று விடியற்காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலில் குவிந்தனர்.இதனால் பொது தரிசனம்,சிறப்பு தரிசனம் உள்ளிட்ட வழிகளில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏராளமான பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் கோவில் கோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து விட்டு மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.போதிய அளவு மினி பஸ் இயக்காததும்,போதிய அளவு காவல்துறையினரின் பாதுகாப்பு இல்லாததாலும், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. எனவே,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசேஷ நாட்களில் உரிய நடவடிக்கை எடுத்து பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment