• Breaking News

    தென்காசி: அரியப்பபுரம் ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி ஆணை வழங்கல்


    அரியப்பபுரம் ஊராட்சியில் வீடு கட்ட  தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், அரியப்பபுரம் ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ்குமார், துணைத்தலைவர் சக்திகுமார் ஆகியோர் பங்கேற்று பயனாளிகள் வெள்ளைபனையேறிப்பட்டி ராஜ்ராமன்,  எல்லைப்புளி காமராஜ் நகர் பால்சுதர்சன் ஆகியோருக்கு வழங்கினர். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சௌந்தர் நன்றி கூறினார்.

    No comments