ஆனந்த் சாருக்கு விசுவாசமாக இருக்கிறவர்களுக்கு தான் பதவி.... கொளுத்திப்போட்ட தவெக நிர்வாகி - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 5, 2025

ஆனந்த் சாருக்கு விசுவாசமாக இருக்கிறவர்களுக்கு தான் பதவி.... கொளுத்திப்போட்ட தவெக நிர்வாகி

 


தலைவரை சுத்தி முழுக்க முழுக்க தப்பு நடக்குது அது எனக்கு பக்கவாக தெரிகிறது என்று தமிழக வெற்றிகழக நிர்வாகி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

த.வெ.க. நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோவில், “தலைவரை சுத்தி முழுக்க முழுக்க தப்பு. நடக்குது . எனக்கு பக்கவாக தெரிகிறது. இது வந்து வெளில யாருக்கும் தெரிய மாட்டேங்குது ஆனந்த் சாரை ரொம்ப புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் ஆனந்த் சாரை 100% நம்புகிறார் தலைவர். அதற்கு ஆனந்த் சார் உண்மையாக இருக்கிறாரா? என்று கேட்டால் இல்லை. பார்ப்பதற்கு எல்லோருக்கும் உண்மையாக இருப்பது போல் தெரிகிறது .ஆனால் உண்மையாக இல்லை .நீங்கள் கேட்கலாம் எப்படி உண்மையாக இல்லை என்று சொல்கிறாய் என்று. நான் ஒரு காரணம் சொல்கிறேன் அதற்கு ஆனந்த் சார் பதிலளிக்க வேண்டும். அப்பொழுது அவர் உண்மையாக இருக்கிறாரா? என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பணம், ஜாதி, விசுவாசம் இது மூன்றுக்கும் தான் பதவி கொடுக்கிறார்கள். அதாவது விசுவாசம் என்றால் தலைவர் விசுவாசம் இல்ல. ஆனந்த் சார் யாருக்கு விசுவாசமாக இருக்கிறாரோ அவர்களுக்கு தான் பதவி. இரண்டாவது பணம், ஜாதி. ஆனந்த் சாருக்கு ஓபன் சேலஞ்ச் விடுகிறேன். பக்கா அண்ணா திமுக, அவங்க பையன் அஜித் ரசிகர் லாஸ்ட் படம் கோட் படத்துக்கு கூட ஒரு பத்துக்கு பத்து பேனர் வைக்கவில்லை.

கட்சிக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. அந்த மூன்று மாதத்தில் தலைவருக்காக எதுவுமே உழைக்காத அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்திருக்காங்க. அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் கட்சியில் சேர்ந்திருந்தார் . அவருக்கு கட்சியில் மூன்று மாதம் ஆகிறது மூன்று மாதத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்திருக்காங்க. பணம் இல்ல ஜாதி இல்ல அப்ப எந்த அடிப்படையில் இந்த பதவி கொடுத்திருக்காங்க. இதை ஆனந்த் சார் தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment