அமெரிக்கா: ஏர்போர்ட்டில் ஜெட் விமானங்கள் மோதி பயங்கர விபத்து - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 11, 2025

அமெரிக்கா: ஏர்போர்ட்டில் ஜெட் விமானங்கள் மோதி பயங்கர விபத்து


 அமெரிக்க நாட்டில் சமீப காலமாக விமான விபத்துகள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 4 விமான விபத்துகள் குறுகிய காலகட்டத்தில் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விமான விபத்து நடந்துள்ளது. அதாவது அரிசோனா பகுதியில் ஸ்காட்ஸ் டேல் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியார் வணிக ஜெட் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த விமானத்தின் மீது மற்றொரு வணிக ஜெட்  விமானம் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.அதாவது டெக்ஸாஸ் ஆஸ்டின் பகுதியில் இருந்து வந்த ஜெட் விமானம் தரை இறங்கிய போது கியர் செயலிழந்து விட்டது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.

 இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment