இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத். இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதி எம்.பியாகவும் உள்ளார். இவர் தேசிய திரைப்பட விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். இந்திய அரசாங்கத்தால் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
இந்த நிலையில் கங்கனா இமாச்சலப் பிரதேசத்தில் காதலர் தினத்தன்று உணவகம் ஒன்று திறக்க உள்ளதாக தனது இணைய பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில்,”இமாச்சலில் உள்ள இமயமலையில்”தி மவுண்டன் ஸ்டோரி”என்ற உணவகத்தை காதலர் தினத்தன்று திறக்க உள்ளேன். இது ஒரு இமயமலையின் காதல் கதை. இதன் மூலம் ஒரு குழந்தையின் கனவு உயிர்பெறுகிறது”இந்த பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் மும்பை மற்றும் மணாலிலுள்ள கங்கனாவின் வீடு கட்டிய வடிவமைப்பாளர் சப்னம் குப்தா இந்த கஃபே ரெஸ்டாரன்ட் இன் வடிவமைப்பு விவரங்களை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதன் வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
No comments:
Post a Comment