எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சென்ற பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்த காவலருக்கு பாராட்டு - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 12, 2025

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சென்ற பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்த காவலருக்கு பாராட்டு


நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று தைப்பூச தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில் திருக்குவளையில் இருந்து எட்டுக்குடிக்கு செல்லும் பிரதான சாலையில் குளம் சீரமைப்பு பணி நடைபெறுவதால் மாற்று வழியில் செல்வதற்கு தற்காலியாமாக பாதை தயாராகி உள்ள சூழலில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமான சூழல் இருந்ததால் தனி ஒரு மனிதனாக நின்ற திருக்குவளை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் சதீஷ்குமார் போக்குவரத்து நெரிசலை சமாளித்து அனைத்து வித வாகனங்களையும் வழிநடத்தி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 போக்குவரத்து நெரிசலை சரி செய்த காவலருக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியையும் பாராட்டயையும் தெரிவித்து வந்தனர்.


நாகப்பட்டினம் மாவட்ட செய்தி: செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி 


No comments:

Post a Comment