தாம்பரம் கடபேரியில் ஸ்ரீ தாந்தோன்றி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயான கொள்ளை பூஜை நடைபெற்றது
சென்னை அடுத்த தாமரம் கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தாந்தோன்றிய அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா முன்னிட்டு மயான கொள்ளை பூஜை இந்து திராவிட மக்கள் கட்சியின் ஆண்மீக மாவட்ட தலைவர் ஆர்த்தி அம்மா தலைமையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்து திராவிட மக்கள் கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் ரமேஷ்பாபுஜி கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஆர்த்தி அம்மா காளிவேடமிட்டு முக்கிய வீதிவழியாக தாரை தப்பட்டை முழங்க ஊர்வலம் சென்று இறுதியாக சிவன் கையில் இருந்த பிரம்ம கபாலம் சூரனை வதம் செய்து அழித்தார். இது மயான கொள்ளை பூஜை என புராணங்கள் தெரிவிக்கின்றன இநிகழ்ச்சியில் இந்து திராவிட மக்கள் கட்சி மற்றும் ஆலய நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments