அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும்..... தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனு
அதிமுக உக்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
சூரியமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவர் அல்ல. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மனு அளிக்கவோ, வழக்கு தொடரவோ சூரியமூர்த்திக்கு உரிமை இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
No comments