• Breaking News

    பொது இடங்களில் சிலை, கட்சிக்கொடி வைப்பதை ஏற்க முடியாது..... ஐகோர்ட் மதுரைக் கிளை காட்டம்

     


    திருவாரூர் நாச்சியார் கோவிலில் எம்.ஜி.ஆர்., சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை இன்று (பிப்.,20) நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

    * பொது இடங்களில் சிலை, கட்சிக்கொடி வைப்பதை ஏற்க முடியாது.

    * தலைவர்கள் சிலை, கொடிகளை கட்சி அலுவலகம் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டியது தானே?

    * எந்த கட்சியாக, எந்த இயக்கமாக இருந்தாலும் இதை அனுமதிக்க முடியாது.

    * அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து, வாபஸ் பெற உத்தரவிட்டனர்.

    No comments