கும்மிடிப்பூண்டியில் மகளிர் குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, February 6, 2025

கும்மிடிப்பூண்டியில் மகளிர் குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது


கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு  கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி தலைமை  தாங்கினார். இந்த கூட்டத்தில் பூவிருந்தவல்லி வடக்கு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர்  வரதன் பங்கேற்று நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், அதில் நீக்கல். சேர்த்தல் குறித்து விளக்கினார். இதனை தொடர்ந்து மகளிர் குழுவினர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், மற்றும் வட்ட வழங்கல் துறையில் தங்கள் சந்தேகங்களை கேட்டு சரிசெய்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு மகளிர் குழுக்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



No comments:

Post a Comment