புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வி..... - MAKKAL NERAM

Breaking

Saturday, February 8, 2025

புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வி.....


 தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாற்றும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.,

இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது.‌ இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும். இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் பாஜகவின் பாவேஷ் ஷர்மா வெற்றிபெற்றுள்ளார்.

No comments:

Post a Comment