விஜயை விமர்சனம் செய்வதாக நினைத்து உதயநிதி ஸ்டாலின்,கமல்ஹாசனை சீண்டிய திருமாவளவன் - MAKKAL NERAM

Breaking

Thursday, February 27, 2025

விஜயை விமர்சனம் செய்வதாக நினைத்து உதயநிதி ஸ்டாலின்,கமல்ஹாசனை சீண்டிய திருமாவளவன்

 



தர்மபுரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசினார். இது பற்றி அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள். கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனும் என்னை விலைக்கு வாங்க முடியாது. கிட்டத்தட்ட 35 வருடங்களாக மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு பெரும்பாடு பட வேண்டியிருந்தது.


சில பேர் 50 முதல் 60 வயது வரையிலும் சினிமாவில் நடித்து பொண்ணை தேடி பொருளைத் தேடி சுகபோகமாக வாழ்ந்து விட்டு, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக கழித்து விட்டு தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள். அவர்களுக்கு இப்படி ஊர் ஊராக போய் பேச வேண்டிய அவசியம் கிடையாது ஊர் ஊராக போய் கொடியேற்ற வேண்டிய அவசியம் கிடையாது. ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கனும் அதற்கு அடுத்த ஆட்சிக்கு போகணும் என்று கூறினார். 

மேலும் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்ற போது அடுத்த வருடம் கண்டிப்பாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்று விஜய் சூளுரைத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் திருமா இப்படி விமர்சித்துள்ளார். திருமாவளவன் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் கூட்டணி கட்சிகளான திமுக, அவற்றின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் பொருந்தாதா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment