• Breaking News

    பேட் கேர்ள் திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம்..... படத்தை பாராட்டும் விஜய் சேதுபதி,வெற்றிமாறன்,ரஞ்சித் ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.... அர்ஜுன் சம்பத் பேச்சு


    திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் இருந்த பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தனகோபாலகிருஷ்ண பழமை வாய்ந்த  கோயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்  கடந்த மாதம் 27ம் தேதி கோவிலை கோவிலில் இடித்து பிரமோத்குமார் ஐ முழுமையாக அகற்றப்பட்டன.

    இதற்கு புல்லரம்பாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தநிலையில் அந்த கோவில் இடிக்கப்பட்ட இடத்தின் அருகே 1 சென்ட் பட்டா நிலத்தை வாங்கி  ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ண ஸ்ரீ சந்தான மற்றும் விநாயகர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், புல்லரம்பாக்கம் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்.அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியது. கடந்த ஒரு வருட காலமாக கோவில் அருகே தனியார் ஆக்கிரமிப்பு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை இணைந்து செயல்பட்டு தற்பொழுது அரசாங்கத்தால் ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றப்பட்டு வருவதாகவும்,

    தமிழகம் முழுவதும் இந்து  அறநிலையத்துறை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை வருமானம் உள்ள கோயில்களை மட்டும் தான் நிர்வாகம் செய்வதாகவும்,பொது மக்களே பல இடங்களில் வழிபாட்டுக்காக இத்தகைய கோயில்களை அமைத்து வழிபாடு செய்து வருவதாகவும், அத்தகைய கோயில்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றப்படும் போது  அறநிலையத்துறை மௌனம் காப்பது ஏன் என்றும்,

     பிப்ரவரி 3 தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாள் இன்று அவர் நாத்திக கொள்கையை கடைப்பிடித்தவர் அவருடைய பிறந்த நாளை  திமுக அதிமுகவினர் கட்சி அலுவலகத்தில் அன்னதானம் வழங்காமல்,  கோவில்களில் ஒருவரின் நினைவு நாளை சமபந்தி போஜனம் நடத்துவது பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், அவர் தெரிவித்தார்.


     மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை பகுதியில் அந்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது திருப்பரங்குன்றம் மலை இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் முருகனுடைய முதல் படை வீடு அந்த மலையின் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு நாங்கள் ஆடுகளை கோழிகளை பலியிடுவோம் அந்த மலை கந்தர் மலை அல்ல முருகன் மலை அல்லது சிக்கந்தர் மலை இப்படி ஒரு குரூப் கிளம்பி இருக்காங்க இந்த ரெண்டு மூணு வருஷமா அந்த மலை மேல ஒரு ஆக்கிரமிப்பு இருக்கு போர்க்காலத்தில் ஒரு தர்கா உருவாக்கப்பட்டது ஒருவருடைய  பிணம் புதைக்கப்பட்டது அந்த தர்கா வழிபாட்டிற்கு போவார்கள் வருவார்கள் இந்துக்கள் சகிப்பு தன்மையோடு தான் இருந்தார்கள் அவர்களுக்கு எந்த இடையூறும் பண்ணவில்லை எஸ்டிபிஐ, நவாஸ் கனி சில அரசியல் கட்சிகளின் திமுக அதிமுக அதில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஒன்று கூடி உள்ளூர் முஸ்லிம்களும் தூண்டி விட்டு மலையில் ஆடு கோழிகளை பலியிடுவோம் என மதக் கலவரத்தை தூண்ம் முன்னோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும்,

    திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுடைய மலை அந்த முருகப்பெருமானுடைய அந்த மலையை பாதுகாக்க இந்து அமைப்புகள் ஆன்மீக அமைப்புகள் இந்து முன்னணி சங்கப் பரிவார் எல்லாம் சேர்ந்து ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

    இதனால் அப்பகுதி உள்ள மக்களை எல்லாரையும் வீட்டுக்காவலில் கைதி செய்து வருகின்றனர். இதுகுறித்து துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்து வருகின்றனர் பொய் வழக்கு போடுவது மிகப்பெரிய அராஜகமும்,  பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியும் அவர்களுக்கு கூட இவ்வளவு அராஜகம் செய்யவில்லை  என்றும், 

    திமுக போராட்டம் நடத்தினால் மட்டும் அனுமதி பாதுகாப்பு. 144 தடை உத்தரவு மதுரையில் அண்ணா நினைவு நாள் திமுக நடத்தும் பேரணிக்கு மட்டும் அனுமதி. பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு 144 தடை உத்தரவு என தெரிவித்தார்.

    மேலும் நாட்டு நடுத்தர மக்கள் மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய மிடில் கிளாஸ் மாதவன் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளனர் அதற்கு வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பேட் கேர்ள் திரைப்படம் பள்ளிக்கு வரக்கூடிய சிறுமி காமத்தில் ஈடுபடுவது காதலில் ஈடுபடுவது இதை தட்டிக் கேட்கும் பெற்றோருக்கு தற்கொலை மிரட்டல் விடுப்பது தமிழ்நாட்டில் ஏற்கனவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் சீண்டல் பாலியல் தொந்தரவு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் யார் அந்த சார் இப்போது யார் அந்த கார் இந்த நிலைமை உள்ளது இந்த நிலையில் இந்த பேட் கேர்ள் திரைப்படம் ரஞ்சித் இந்தப் படத்தை பாராட்டுகிறார்கள் பெண்களுக்கு கட்டற்ற பாலியல் சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள் பள்ளியில் குழந்தைகளை படிக்க அனுப்புகிறோமா எதற்காக அனுப்புகிறோமா இவர்களை எல்லாம் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பெண் சிறுமிகளை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கக் கூடிய வகையில் அவமானப் படுத்தும். உங்கள் வீட்டு குழந்தைகள் சிறுமிகள் பேட்கேளாக  இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா விஜய் சேதுபதி. வெற்றிமாறன். ரஞ்சித்தையும் கேட்கிறேன் சேரன் திரைப்பட இயக்குனர் இது போன்று மாட்டிக்கொண்டார் எல்லோரும் போய் காலில் விழுந்து வவிடுவித்தார்கள் நமது வீட்டு பெண் என்றால் சும்மா இருப்போமா யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் வைத்துக் கொள்ளலாம் இதுதான் பெண் சுதந்திரமா இதை மையமாக வைத்து அதுவும் பிராமண சமூக குழந்தைகளை குறிவைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது அந்தப் படத்தின் டீசரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளோம் அதை தடை செய்ய வேண்டும் திரைப்படம் தவறான முன்னுதாரணம் இதை தணிக்கை துறை நீதி துறைக்கு முறைத்துள்ளதாகும் அவர் தெரிவித்தார்.

    மேலும் கருணாநிதி நினைவிடத்தில் ஏ.வா வேலு பஜனை பாடிவிட்டார் திமுக குடும்ப பெருமைகள் தான் அதில் ஒன்ரும் அதிகமாக போய்விட்டது ஸ்டாலின் உயிரோடுதான் இருக்கிறார் அவரது படத்திற்கு பூ போட்டு விட்டார் பாருங்கள் நாசர் எப்போதும் அது போன்று செய்யக்கூடியவர் தான் கல் எடுத்து வீசிவர் தானே நாசர் இது திமுகவின் கோமாளித்தனம் என்று விமர்சித்துள்ளார்.

    No comments