திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் CCTV கேமராக்கள் இருந்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை - MAKKAL NERAM

Breaking

Saturday, February 8, 2025

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் CCTV கேமராக்கள் இருந்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை


திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை குற்ற சம்பவம் நடைபெறும் போது காவல்துறையினர் பார்வையிட உடனே அனுமதிக்கின்றனர்.

ஆனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் காவல்துறையினரிடம் சென்னையில் நாங்கள் அனுமதி வாங்க வேண்டும் டெல்லியில் நாங்கள் அனுமதி வாங்க வேண்டும் என்று காலதாமதம் செய்து காவல்துறையினருக்கு  ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

குற்ற சம்பவங்கள் நடைபெற்ற உடன் காவல்துறையினர் உடனடியாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் காவல்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment