திருமணஞ்சேரி கல்யாணம் மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..... 12 அடி நீள அலகை வாயில் குத்தி வேண்டுதல்; காண்போரை பக்தி பரவசமடைய செய்தது - MAKKAL NERAM

Breaking

Sunday, March 30, 2025

திருமணஞ்சேரி கல்யாணம் மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..... 12 அடி நீள அலகை வாயில் குத்தி வேண்டுதல்; காண்போரை பக்தி பரவசமடைய செய்தது


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது திருமணஞ்சேரி திருமணம் நடக்க வேண்டி இங்குள்ள உத்வேகநாதர் ஆலயத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருமண வரம் கை கூட வேண்டி வேண்டுதல் செய்வது வழக்கம் இத்தகைய சிறப்புடைய இவ்வூரில் கல்யாண மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

 இந்த ஆலய தீமிதி திருவிழாவை ஒட்டி கடந்த 19ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினம் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக விக்ரமன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு வானவேடிக்கை மேளதாள வாக்கியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தது பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் ஆலய முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்த தீமிதி திருவிழாவை ஆயிரத்திற்கு மேல் பக்தர்கள் கண்டு களித்து கல்யான மாரியம்மனின் அருளை பெற்றனர் இவ்விழா ஏற்பாடுகளை ஊர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment