தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம் தகவல் - MAKKAL NERAM

Breaking

Friday, March 21, 2025

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம் தகவல்

 


தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மிதமன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment