• Breaking News

    கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய ஊராட்சிகளின் பாகமுகவர்கள் BLA-2, பாக களப்பணியாளர்கள் BLC மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்


     சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையர்மலை தெற்கு ஒன்றியம் கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய ஊராட்சிகளின் பாகமுகவர்கள் BLA-2, பாக களப்பணியாளர்கள் BLC மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னை, கோவிலம்பாக்கம் என்.ஆர்.பி.மஹாலில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று புனித தோமையார்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

     இந்த நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ச.அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நா.சந்திரபாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். 

    இதில், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதி ராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் J.E.பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ஆர்.சொக்கலிங்கம் மற்றும் கோவிலம்பாக்கம், நன்மங்கலம் பகுதிக்கு உட்பட்ட கிளை கழகச் செயலாளர்கள், பாக முகவர்கள், பாகநிலை முகவர்கள், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    No comments