கடன் பிரச்சனை.... டாக்டர் குடும்பத்தோடு தற்கொலை - MAKKAL NERAM

Breaking

Thursday, March 13, 2025

கடன் பிரச்சனை.... டாக்டர் குடும்பத்தோடு தற்கொலை

 


சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பின் அவர்கள் நடத்திய விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இது தொடர்பாக காவல்துறையினர் கடன் கொடுத்தவர்களின் துன்புறுத்தலால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment