தோரணமலை முருகன் கோவிலில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம்..... ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Monday, March 31, 2025

தோரணமலை முருகன் கோவிலில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம்..... ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு


தோரணமலை முருகன் கோவிலில் போட்டி தேர்வுகளுக்கான  இலவச பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதோரணமலை முருகன் கோவிலில் ஆன்மீக பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமுதாய பணிகள், கல்வி சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக  சென்னை மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த துளிர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் போட்டிக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது .

துளிர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் மாரிமுத்து, இணை இயக்குனர்கள் முரளி அண்ணாதுரை ,காளிதாஸ், கூட்டுறவு சார் பதிவாளர் சரவணகுமார்  ஆகியோர் பங்கேற்று,  பிளஸ் டூ பிறகு என்ன படிக்கலாம் வேலை பார்த்துக் கொண்டே என்ன படிக்கலாம் என்ன என்ன தேர்வுகள் எப்படி எழுதலாம் போன்ற  பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

இதில் கடையம், தென்காசி கடையநல்லூர் பாவூர்சத்திரம் ஆலங்குளம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் .  .அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தோரணமலை முருகனுக்கு 60 ஆண்டுகள் கடந்து இறை பணி செய்த வரும் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார் .

No comments:

Post a Comment