அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் எப்போது.?
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள் தான், அந்த வகையில் அரசின் திட்டங்களை கடைநிலை வரை கொண்டு செல்வது அரசு ஊழியர்கள் தான். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் தமிழக அரசோ சரண் விடுப்பை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனை ஏற்காத ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கு ஏற்றார் போல பல குடும்ப செலவு உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதிதாரர்கள் உள்ளிட்ட17 லடசம் அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் காலதாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். 7.05 இலட்சம் அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை ,இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments