ஆவின் பால் விலை உயர்வா.? அமைச்சர் சொன்ன பதில் - MAKKAL NERAM

Breaking

Friday, March 21, 2025

ஆவின் பால் விலை உயர்வா.? அமைச்சர் சொன்ன பதில்

 


தமிழகத்தில் பால் சந்தைகளில் அதிக இடம் தனியார் நிறுவனங்களிடமே உள்ளது. அதாவது 84% உற்பத்தியை தனியார் நிறுவனங்களே  மேற்கொள்கிறது. எனவே அடிக்கடி பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி வருகின்றனர். 

தனியார்  நிறுவனமான ஹட்சன் நிறுவனம் ஆரோக்கிய பாலின் விலையை 1 லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் 1 கிலோவிற்கு 3 ரூபாயும் சமீபத்தில் உயர்த்தியது.இந்த விலை ஏற்றம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தின் போது பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பால் விலை உயர்த்துவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த அறிவிப்பில்,”பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணை வியாபாரிகளும் சாமானியர்தான், அதனை வாங்கும் மக்களும் சாமானியர்கள் தான்.எனவே தனியார் நிறுவனங்கள் அடிக்கடி பாலின் விலையை உயர்த்தினாலும், தமிழ்நாடு அரசிற்கு பாலின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை. அதன்படி தனியார் துறை பால் 1 லிட்டருக்கு 56 ரூபாய் விற்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசு ரூபாய் 40க்கு மட்டுமே 1 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment