தேசிய கீதத்தை அவமதித்த நிதீஷ் குமார்..... வீடியோவை வெளியிட்ட தேஜேஸ்வி யாதவ்....
பீகார் மாநிலத்தில் முதன் முறையாக செபக்தக்ரா உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்ற நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது முதல்வர் நிதீஷ் குமார் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்கும் விதமாக நடந்து கொள்ளாமல் அவர் அருகில் இருப்பவருடன் பேசி சிரித்ததோடு போட்டோவுக்கு கை காண்பித்தார்.
இது தொடர்பான வீடியோவை தேஜஸ்வி யாதவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் முதல்வர் நிதீஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.
No comments