நாகை: திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகா யாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, March 14, 2025

நாகை: திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகா யாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன்  கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உலக நன்மை வேண்டி மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு இன்று சிறப்பு மகா  யாகம் இன்று  நடைபெற்றது.

 மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள்  வரிசை தட்டு எடுத்து வந்தனர். பிரம்மாண்ட யாக குண்டம் உருவாக்கப்பட்டு அதில் பட்டு, சமத்துக்கள், பழ வகைகள் உள்ளிட்ட 108 யாகப் பொருட்கள் கொண்டு  நவ  ஷோமம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி நடைபெற்ற யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை ஆலயத்தைச் சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 

தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த  பக்தர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி

No comments:

Post a Comment