• Breaking News

    தமிழகத்தில் இன்று முதல் பால் விலை உயர்வு

     


    தமிழகத்தில் இன்று முதல் ஆரோக்கியா பாலின் விலை உயர்கிறது. அதன்படி ஆரோக்கிய பால் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் வரையில் உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் நிறைகொழுப்பு பாலின் விலை ஒரு லிட்டர் 76 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரையில் உயர்கிறது.

    இதேபோன்று 400 கிராம் தயிரின் விலை 32 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக உயர்கிறது. இதனையடுத்து பால் மற்றும் மோர் பாக்கெட்டுகளில் 125 ml 120ml ஆகவும், 180ml 160 ml ஆகவும் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

    No comments