• Breaking News

    ஆட்டுமந்தை போல் இளைஞர்கள்..... திருமாவளவன் பரபரப்பு பேச்சு

     


    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விழுப்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 2026 நடைபெறும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை நாங்கள் திமுக கூட்டணியில் கேட்டு பெறுவோம். ஆனால் அதிக இடங்களுக்காக அணி தாவுவோம் என்று நினைக்க கூடாது. 

    அதற்கு வாய்ப்பே இல்லை. திமுக கூட்டணியுடன் சேர்ந்து தான் விசிக அடுத்த தேர்தலை சந்திக்கும். நடிகர்கள் கட்சி தொடங்குவதால் விசிக கரைந்து விடாது. யார் புதிதாக கட்சி தொடங்கினாலும் அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும் சரி கண்டிப்பாக அவர்களால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேதப்படுத்த முடியாது. ‌ ஏனெனில் அந்த இயக்கமும் புதிது அவர்களின் கொள்கை கோட்பாடுகளும் புதிது.

    சினிமா கவர்ச்சியால் இந்த இளைஞர்களை யாரும் திசை மாற்றி விட முடியாது. அவர்களை மடை மாற்றி விட முடியாது என்பதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அதை உண்மை என்பதை காலம் உணர்த்தியதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியை இன்று ஒரு மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

     இப்போதும் சொல்கிறார்கள் ஒரு நடிகர் கட்சி தொடங்கி விட்டதால் இந்த இளைஞர்கள் எல்லாம் ஆட்டுமந்தை போல் அவர் பின்னால் திரும்புவார்கள் என்று. அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை.பெரியார், அம்பேத்கர் மற்றும் மார்க்கஸை ஏற்றுக் கொண்டே என்னோடு பயணிக்கும் இளைஞர்களை எந்த கொம்பனாலும் திசை திருப்ப முடியாது என்று கூறினார். மேலும் திருமாவளவன் நடிகர் விஜயை மறைமுகமாக சாடி தான் இப்படி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    No comments