மகாராஷ்டிரா: கொலை வழக்கு...... அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தனஞ்செய் முண்டே
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்செய் முண்டே உணவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சர் தனஞ்செய் முண்டேவை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் கிராம நிர்வாக அதிகாரி சந்தோஷ் தேஷ்முக் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அமைச்சரின் உதவியாளரான வால்மிக் கரத் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர் தற்போது தனது பகுதி ராஜினாமா செய்துள்ளார்.
No comments