நாகை: மணக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி - MAKKAL NERAM

Breaking

Wednesday, March 26, 2025

நாகை: மணக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி


 நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு வட்டாரம் மணக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தொலை நோக்கு பயிற்சி 25.03.2025 மணக்குடி  ஊராட்சியில் கிராம சேவை மையம் அலுவலகத்தில் நடைப்பெற்றது.இதில் மணக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் தலைவர் சின்னகன்னு தலைமையில் செயலாளர் ராதா (ம) பொருளாளர் வனிதா முன்னிலையில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.

இதில் செயல்முறை விளக்கம், சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு 6 பரிமாணங்கள் (61 காரணிகள் கொண்டு   கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு , போன்ற பரிமாணங்கள் கொண்டு 2025 - 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் (ம) பொறுப்பு இலக்கு கொண்டு இந்த ஆண்டு  உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் பற்றி, SHG உறுப்பினர்கள் PLF EC உறுப்பினர்களுக்கு மற்றும் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் CRP P&C, LH பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் ரம்யா, இந்துமதி. ரூபி சிந்தியா உடனிருந்தனர்.

No comments:

Post a Comment