வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி,மாமியார்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடைய மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஒரு சாலையில் கடந்த வாரம் ஒரு கார் தனியாக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்த காரை திறந்து பார்த்தபோது அந்த காரில் ஒருவர் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது லோக்நாத் சிங் என்பதும் அவர் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பது தெரிய வந்தது.இது தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி மற்றும் மாமியாரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முதலில் லோக்நாத் சிங்கிற்கு அவருடைய மனைவி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தன் தாயின் உதவியுடன் தன் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்து காரில் சடலத்தை போட்டு ஒரு இடத்தில் சென்று விட்டு விட்டு வந்ததாக கூறியுள்ளனர்.
அதாவது லோக்நாத் சிங் கடந்த இரண்டு வருடங்களாக வேறொரு இளம் பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்ததால் அந்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.இதனால் லோக்நாத் சிங் அந்த பெண்ணை பதிவு திருமணம் செய்ததோடு பின்னர் திருமணம் நடைபெறாதவாறு அந்த பெண்ணை அவருடைய வீட்டில் விட்டு விட்டார். இந்த திருமணம் சமீபத்தில் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் விவாகரத்து பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்.
அதோடு அவர் சட்டவிரோத பண பரிமாற்ற தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.அ வர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உறவில் இருந்தது அவருடைய மனைவிக்கும் தெரிய வந்த நிலையில் கோபத்தில் தன் கணவனை தன் தாயின் உதவியுடன் தீர்த்து கட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments