மீஞ்சூர்: மெதூர் ஊராட்சியில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..... மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் பங்கேற்பு..... - MAKKAL NERAM

Breaking

Sunday, March 30, 2025

மீஞ்சூர்: மெதூர் ஊராட்சியில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..... மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் பங்கேற்பு.....


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம்.100நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழ் நாட்டிற்கு தரவேண்டிய 4,034 கோடியை வழங்காமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும்  ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் மெதூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் ஏற்பாட்டில் மத்திய பாஜக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர்  அன்புவாணன், தலைமைக் கழக பேச்சாளர் எழும்பூர் கோபி, மாநில சிறுபான்மை நலன் உரிமை பிரிவு அமைப்பாளர் முகமது அலவி,ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், தொண்டரணி முத்துக்குமார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேசராணி, துணை அமைப்பாளர் ஜெயசித்ரா சிவராஜ்,மெதூர் ரமேஷ், சிலம்பரசன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு 100 நாள் வேலையில் பயன்படுத்தும் பொருட்களை தலையில் வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment